எப்படி நாகேஷைப் பற்றி முன்னர் வதந்திகளுக்கு வால் முளைத்து மக்களை கலங்கடித்ததோ அதைப்போல தற்போது பிரபல பின்னணிப்பாடகி எஸ்.ஜானகி அம்மாவைப் பற்றி வதந்திகள் அடிக்கடி வாலாட்டுகின்றன.
இன்று மதியம் இருந்தே கிளம்பி விட்டது. ரசிகர்கள் பதறிப்போனார்கள். .எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கோபம்.பிறர் உயிருடன் விளையாடுவதா என்று!
ஜானகி அம்மா சாதனையாளர் . பல( 17 ) மொழிகளில் 45 ஆயிரத்துக்கும் அதிகமாந பாடல்களை பாடியிருக்கிறார். மத்திய மாநில அரசுகளின் விருதுகள் .2013 -ஆம் ஆண்டு இவருக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்க முன் வந்தது.
“காலம் தாழ்ந்து வந்த விருது” என்று வாங்காமல் புறக்கணித்து விட்டார். சினிமாவில் பாடுவதில் இருந்து விலகி மகனுடன் ஹைதராபாத்தில் இருக்கிறார். அவரைப் போய் சீண்டுகிறார்களே என்று அனைவரும் வருத்தப்படுகிறார்கள் .
ஜானகி அம்மா இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் தனது கவலையை தெரிவித்திருக்கிறார்.
“எல்லாருமே போன் போட்டு கேட்கிறாங்க.. எத்தனை போன்கால்ஸ் தெரியுமா?.
எதற்கு இந்த மாதிரி செய்தியை வெளியிடுகிறார்கள் என்று தெரியவில்லை. இது முதல் முறையல்ல, 6 வது முறை!
. சும்மா அனாவசியமாக வேண்டுமென்றே செய்து கொண்டிருக்கிறார்கள்.
முன்னதாக இதே மாதிரி செய்தி வந்த போது வாட்ஸ்-அப்பில் பேசி அனுப்பினேன். இந்த மாதிரி வதந்திகள் எல்லாம் வேண்டாம். இந்த மாதிரி செய்தி எல்லாம் கேட்டால் சிலருக்கு உடல்நிலை பாதிக்கும். இந்த மாதிரி பொய் எல்லாம் சொல்லி என்னை நீங்க கொல்லாதீங்க என்று நல்ல திட்டிவிட்டேன். மறுபடியும் இப்படி செய்கிறார்கள். “என்று வருத்தப்பட்டிருக்கிறார்