“இடுப்பையா ஆட்றே ?அந்த இடுப்பை ஓடிச்சு அடுப்பில வக்கிறேன் “என்கிற கதையாகிப்போச்சு ஒரு நடனமாதுவின் கதை.!
எகிப்தில் மிகவும் ஃ பேமஸ் ‘பெல்லி டான்ஸ்.’ இங்கிருக்கிற டான்சர்கள் மாதிரி யாரும் அவ்வளவு அழகாக ,எடுப்பாக ,செக்சியாக அசைத்து இசைக்கு ஏதுவாக விரைந்து ஆட முடியாது.
நாபிச் சுழியின் நளினம் பார்ப்பதா,இடுப்பின் எழிலார்ந்த அசைவினைப் பார்ப்பதா, இவைகளுக்கு இணையாக குலுங்கி ஆடுகிற இளமையை ரசிப்பதா என பார்க்கிறவர்கள் திக்கித் திணறித்தான் போவார்கள்.
அத்துணை அழகு அந்த பெல்லி டான்ஸ்.! இந்த நடனத்தில் புகழ்பெற்றவர் சமா எல் மஸ்ரி .எகிப்தே கொண்டாடியது.டிக்-டோக் அழகி.
இந்த அழகியைத் தூக்கி உள்ளே வைத்திருக்கிறது போலீஸ். 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை!
டிக் டோக் தளத்தில் ஆட்டக்காரி மஸ்ரியின் ஆபாச இடுப்பாட்டம் எல்லை மீறியதாக இருந்திருக்கிறது ..ஆபாச உணர்வுகளை தூண்டுவதாக சொல்லி கைது பண்ணி வழக்குப்பதிவு செய்திருந்தார்கள்.
அந்த குற்றச்சாட்டினை மஸ்ரி மறுத்தார். தன்னுடைய போனில் இருந்து திருடப்பட்டதாக சொன்னார்.திருடியவர்கள் தன்னிடம் அனுமதி பெறாமல் வெளியிட்டுவிட்டார்களாம்.
ஆனால் நீதி சபை ஏற்கவில்லை. 3 ஆண்டுகள் சிறையில் இரு என சொல்லிவிட்டது.