தமிழில் சசி இயக்கத்தில் பரத் நடித்த ஐந்து ஐந்து ஐந்து, விரட்டு, மீரா கதிரவன் இயக்கிய விழித்திரு படங்களில் நடித்தவர், எரிக்கா பெர்னாண்டஸ்.
இந்தி, தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ள இவர் ஏக்தா கபூர் தயாரிப்பில் உருவான கசவுத்தி ஜிந்தகி கே என்ற இந்தி தொடர் மூலம் மிகவும் பிரபலமானார்.
லாக் டவுனில் முடங்கிப் போயிருந்த தொடரின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கி இருக்கிறது.
சமூக வலைத்தளம் மூலமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எரிக்கா பெர்னாண்டஸ் பதிலளித்திருக்கிறார். அதில் காதல் பற்றியவையும் அடங்கும்.
, ” நான் ‘சிங்கிள் இல்லை, காதலித்து வருகிறேன். எனது காதலர் சினிமாத்துறையை சேர்ந்தவர் இல்லை .அவர் எனது சிறந்த நண்பர். நாங்கள் மூன்று வருடமாகக் காதலித்து வருகிறோம்.
நான் சினிமாவில் ஹீரோக்களை ரொமான்ஸ் செய்தால், அவரால் தாங்க முடியாது. அதை விரும்பமாட்டார். படப்பிடிப்புக்கு வந்தால், அந்தக் காட்சிகளின் போது எழுந்து வெளியே சென்றுவிடுவார்” என்று சொன்ன எரிக்காவிடம்,இதற்கு முன் ஜாகீர் ஷேக் உட்பட சிலருடன் கிசுகிசுக்கப் பட்டது குறித்து கேட்டபோது, “அது வதந்தி, அதைத் தவிர்க்க முடியாது , இந்த வதந்திகளால் தான் நான் என் காதலை வெளிப்படையாகச் சொல்ல வேண்டி இருக்கிறது . ‘எனக்கும் என் காதலருக்கும் நல்ல புரிதல் இருக்கிறது. இது சில நேரங்களில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளை சரிபடுத்த உதவுகிறது. கோபமாக இருந்தால் ஒருவர் அமைதியாகி விட வேண்டும், கூலான பிறகு விவாதித்துக் கொள்ளலாம். இந்தத் தன்மை எங்களிடம் இருக்கிறது’ என்கிறார்.