அயர்ன் லேடி ,புரட்சித் தலைவி என்றெல்லாம் புகழப்பட்டவர் செல்வி ஜெயலலிதா.
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் என்ன நடந்தது என்பது தெரியாமலேயே அவரது மரணம் நிகழ்ந்தது.
இயல்பானதா ,கொலையா ,மர்மத்தை வெளிக்கொணருங்கள் என ஒரு விசாரணைக்கமிஷன் அமைத்தார்கள். அதன் முடிவு என்னவென்று இன்று வரை தெரியவில்லை .
மக்கள் மறந்து விட்டார்கள். நமது மக்களுக்கு மறதி என்பது தேசியவியாதி என சிலர் சொல்வது உண்மைதான் என்பதை போல பல விசாரணைகள் கிடப்பில் செத்துக் கிடக்கின்றன. இவைகளைப்போல சாத்தான்குளம் விசாரணை கைதிகளின் கொலையும் மறக்கப்பட்டுவிடுமோ என்கிற பயம் வந்திருக்கிறது மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனுக்கு.!
இன்றைய அவரது பதிவு,:
“சாத்தான்குளம் வழக்கை சி.பி.ஐ .க்கு மாற்றி, பொறுப்பை தட்டி கழிக்காதீர்கள் முதல்வரே! குற்றவாளிகள் மேல் ஐ.பி.சி . 302 கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களை புலனாய்வுத் துறையிடம் ஒப்படையுங்கள்.
சி.பி.ஐ .விசாரணைக்காக மாற்றப்பட்டு, கிடப்பில் இருக்கும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, குட்கா ஊழல் போன்ற வழக்குகளின் வரிசையில் இதையும் சேர்த்து, மக்கள் மறந்து விடுவார்கள் என காத்திராமல், நீதியைக் காத்திடுங்கள். காலம் தாழ்த்தப்பட்ட நீதி, அநீதி.”என்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.