சிலந்தி பட இயக்குநர் ஆதிராமின் அதர்வணம் படப்பிடிப்பில், சுமார் 10 மணி நேரம் நீரில் மிதந்தபடி இருந்த நாயகி ஹரிப்பிரியா திடீரென நீரில் மூழ்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.தமிழ், கன்னடம் என இரண்டு மொழிகளில் இயக்கி வரும் மிரட்டலான த்ரில்லர் படம் ‘அதர்வணம்’. இந்த படத்தை ஆர். மனோஜ்குமார் யாதவ் புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரியா ரமேஷ் வழங்க, எஸ்.ரமேஷ் ‘ரணதந்த்ரா‘ என்ற பெயரில் கன்னடத்தில் பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்.இப்படத்தின் நாயகியாக ஹரிப்பிரியா நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே தமிழில் வல்லக்கோட்டை, கனகவேல் காக்க, முரண், வாராயோ வெண்ணிலாவே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.அதர்வணம் படத்தின் கதை, திரைக்கதை , வசனம் எழுதி இயக்குவதுடன், தனது டிஜிட்டல் தியேட்டர்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் இந்தப்படத்தை பிரமாண்டமாகத் தயாரித்து வருகிறார், ஆதிராம். சென்னை, பெங்களூர், மைசூர், ஷிமோகா, கோவா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், பெங்களூருவுக்கு அருகே நீச்சல் குளத்தில் ஹரிப்பிரியா குளித்து விளையாடுவது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட்டதாம். சுமார் 6 மணிநேரம் படமாக்கப்பட்ட இந்தக் காட்சிக்காக, 10 மணி நேரம் நீச்சல் உடையில் குளிரில் நடுங்கியவாறு தண்ணீரில் மிதந்துள்ளார் ஹரிப்பிரியா.டப்பிடிப்பு முடிய இருந்த வேளையில் திடீரென 12 ஆழம் கொண்ட பகுதியில் தண்ணீரில் மூழ்கி விட்டாராம் ஹரிப்பிரியா. விபரீதத்தை உணர்ந்த படக்குழுவினர் விரைந்து செயல்பட்டு அவரைக் காப்பாற்றியுள்ளனர்.