நாட்டு நடப்புகளை சித்தரிப்பது சினிமாவின் வழக்கம்தான்.!
கொரானா அச்சுறுத்தல் ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் அதைவிட பேராபத்து சீன எல்லை ஊடுருவல்.ஆக்கிரமிப்பு. இந்தியா விடுதலை பெற்ற பிறகு பல முறை எல்லைகளை ஆக்கிரப்பு செய்திருக்கிறது. இந்திய உயிர்களை குடித்திருக்கிறது.
இந்தி -சீனி பாய் பாய் என முழக்கமிட்டபடியே முதுகில் குத்தியவர்கள்தான் சீன அதிபர்கள். தற்போது இந்திய எல்லைக்குள் இந்திய வீரர்கள் கட்டிய கல்வான் பாலம் தொடர்பாக வீண் சண்டையை இழுத்து நமது வீரர்களை கற்கள்,ஆயுதங்கள் கொண்டு தாக்கி மரணம் அடைய செய்தார்கள் .அவர்கள்தரப்பில் 40 பேர் மரணம் அடைந்தார்கள்.
மேற்கண்ட சம்பவங்களை வைத்து இந்திய ராணுவ முன்னாள் மேஜர் ரவி கல்வான் பாலம் என்கிற பெயரில் பல மொழிகளில் படம் எடுக்கப்போகிறார். இந்தியாவின் பல மாநிலங்களை சேர்ந்த நடிகர்கள் நடிக்கப்போகிறார்கள் .2021 ஜனவரியில் படம் ரிலீஸ் ஆகிறதாம்.