கவுகாத்தி உயர்நீதி மன்றத்தில் விசித்திரமான வழக்கு.!
“சங்கு வளையலையும் , நெற்றி வகிட்டில் வைக்கவேண்டிய குங்குமத்தையும் மனைவி மறுக்கிறாள்.அதனால் விவாகரத்து வழங்க வேண்டும் “ஒரு கணவன் வழக்குத் தொடர்ந்திருந்தான். “இது இந்துக்களின் வழக்கம். அவ்வாறு செய்யாதவர்கள் திருமணத்தை ஏற்கவில்லை என்பதாக அர்த்தம்.ஆகவே விவாக ரத்து வழங்க வேண்டும்”என்பதாக சொல்லியிருந்தான்.
இது வட இந்திய ஊடகங்களில் அதிக அளவில் விவாதிக்கப்பட்டது.
பெருமளவில் பெண்கள்தான் கலந்து கொண்டிருந்தனர்.எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் ,பெண்ணின் உரிமையில் தலையீடு செய்வதாக கண்டனம் செய்தனர்.
கணவன் சொன்னதை ஏற்றுக்கொண்டு தலைமை நீதிபதி அஜய் லம்பா ,நீதிபதி சவுமித்ரா சைகியா இருவரும் விவாகரத்துக்கு ஆதரவாக தீர்ப்பு எழுதினார்கள்.
“ஒரு பெண் மணவாழ்க்கையில் நுழைந்தபின்னர் வளையல் அணிவது ,நெற்றி வகிட்டில் குங்குமம் வைப்பது இந்துக்களின் சடங்கு.வழக்கம் சொல்கிறது.அவள் அவ்வாறு செய்ய மறுத்தால் அவள் மணம் ஆகாதவள் ,மணஒப்பந்தத்தை மறுப்பவள் “என்பதாக அர்த்தம் என சொல்லியிருக்கிறார்கள்.
திலகம் இட்டுக்கொள்வதும் ,வளையல் அணிவதும் பெண்களின் விருப்பம்.பெண்களைப் போல ஆண்களும் இப்படிப்பட்டவைகளை செய்வார்களா?என்றும் நாம் 21 ஆம் நூற்றாண்டில் இருக்கிறோமா அல்லது 17 ஆம் நூற்றாண்டை நோக்கி செல்கிறோமா என்றும் தீர்ப்பினை விமர்சித்து வருகிறார்கள்.
லைவ் லா என்கிற இணையதளத்தில் இந்த செய்தி வெளியாகி இருக்கிறது.தமிழ்நாட்டில் நடக்கும் திருமணங்களில் மனைவியின் நெற்றியில்தான் கணவன் குங்குமம் விடுவான். நெற்றி வகிட்டில் இல்லை.