‘நான் ருத்ரன்.’
தனுஷ் இயக்கப்போகிற படம். இந்திய விடுதலைக்கு முன்னர் நடந்ததாக புனையப்பட்ட கதை. இந்தப்படத்தைப் பற்றி ஒரு ஆங்கில நாளிதழுக்கு இசை அமைப்பாளர் சீன் ரோல்டன் அளித்த பேட்டியில் மிகவும் புகழ்ந்து சொல்லியிருக்கிறார்.
இந்த படத்தில் சரத்குமார் ,நாகார்ஜுனா ,எஸ்.ஜெ.சூர்யா ,ஸ்ரீகாந்த் ,அதிதிராவ் உள்ளிட்ட பலர் நடிக்கவிருக்கிறார்கள் .
“இந்த படத்தின் வழியாக மிகப்பெரிய இயக்குநராக தனுஷை பார்க்கலாம்.மிகவும் பேசப்படுவார்.
இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.
கதையில் ஏகப்பட்ட திருப்பங்கள் இருக்கிறது.அந்தப்படம் தமிழ்ச்சினிமாவில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று உறுதியுடன் சொல்வேன்
எப்படி தெலுங்கு சினிமா உலகில் பாகுபலி மாற்றத்தைக் கொடுத்ததோ அத்தகைய மாற்றத்தை நான் ருத்ரன் ஏற்படுத்துவான்” என்பதாக சொல்லியிருக்கிறார்.