அஞ்சலியுடன் இணைந்து சில காலம் ஜெய் வாழ்ந்தாலும் அதை இருவருமே மறுத்தார்கள் .இருவரும் படங்களில் நடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ‘கேப்மாரி படத்தை தொடர்ந்து நடிகர் ஜெய், பிரபல இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
அவருடன் பாரதிராஜா ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்க உள்ளாராம்.. மேலும் இந்த படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக முன்னாள் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் திவ்யா துரைசாமி நடிக்கவிருக்கிறார்.
வேல்ராஜ் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். முன்னதாக, சுசீந்திரன் இயக்கிய ‘பாண்டிய நாடு’, ‘கென்னடி கிளப்’ ஆகிய படங்களில் பாரதிராஜா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.’கென்னடி கிளப்’ படத்தை தொடர்ந்து சுசீந்திரன் இயக்கவுள்ள இப்பத்தின் தலைப்பு மற்றும் நடிகர் நடிகைகள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.