விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ’மாஸ்டர்’
கொரோனா பிரச்சினை முடிந்த பின்னர் வெளியாகும் முதல் திரைப்படமாக இருக்கும் என்கிறார்கள்.
’மாஸ்டர்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருப்பது எல்லோருக்கு தெரிந்த சேதி தான்.
விஜய்யுடன் முதன் முதலில் அதுவும் பிசியான கதாநாயகனாக பல படங்களில் நடித்து வரும் நிலையில், இப்படத்தில் விஜய்க்கு எதிராக விஜய் சேதுபதி நடித்துள்ளது அவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும்எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விஜய் சேதுபதி, ’மாஸ்டர்’ திரைப்படத்தில் தனது வில்லன் கேரக்டர் குறித்து சில தகவல்களை வெளியிட்டுள்ளார். ’மாஸ்டர்’ திரைப்படத்தில் முழுக்க முழுக்க தனது கேரக்டர் வில்லன் தான் என்றும் துளிகூட நல்லவன் இல்லை. இது போன்ற கேரக்டர்களில் நடிப்பதற்கு மிகவும் ஆவலுடன் இருந்ததாகவும் அந்த வாய்ப்பு இப்போதுதான் தனக்கு கிடைத்திருப்பதாகவும்’ சொல்கிறார்.