
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை வரலட்சுமி சரத்குமார்.
தற்போது சந்தான மூர்த்தி இயக்கத்தில் போலீஸ் அதிகாரியாக டேனி என்ற படத்தில் நடித்துள்ளார்.இப்படம் வரும் ஆகஸ்ட் 1- ல் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இப்படத்தை தயாரித்துள்ளார்.
மேலும் கன்னிராசி,காட்டேரி,பாம்பன்,பி
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் வரலட்சுமி பல சமூகப் பிரச்சினைகள் குறித்தும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக கிடைத்துள்ள இந்த நேரத்தை வரலட்சுமி தனது வீட்டிலேயே பயனுள்ள வகையில் தன்னை குட்டி தொழிலதிபராக மாற்றிக்கொண்டுள்ளார்.
. லைஃப் ஆஃப் பை என்ற பெயரில் பேக்கரி கம்பெனி ஒன்றை துவங்கியுள்ளார். இதுகுறித்து வரலட்சுமி தனது வலைதள பதிவில், சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு நான் ஒரு சிறிய பேக்கிங் கம்பெனியை துவங்கினேன். லைப் ஆப் பை மூலமாக பிரஷ்ஷாக பேக் செய்யப்பட்ட சீஸ் டாட்ட்ஸ்களை செய்து கொடுக்கிறேன். இது ஒரு பொழுதுபோக்கு விஷயமாகத்தான் செய்தேன். தற்போது அது ஒரு சிறிய பிசினஸாக வளர்ந்து இருக்கிறது. தற்போது வரை நான் எதிர்பார்க்காத வகையில் 100 ஆர்டர்களை முடித்துள்ளேன். என் மீது நம்பிக்கை வைத்து ஆர்டர் கொடுத்த ஒவ்வொருவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.












