இந்தி திரைப்பட உலகில் மாஸ்டர் ஜி என்று அழைக்கப்பட்டு வந்த முன்னணி நடன இயக்குநர் சரோஜ்கான் ( வயது 72.). இவருக்கு கடந்த 17 ஆம் தேதி திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.இதையடுத்து மும்பை பாந்திராவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சரோஜ்கானுக்கு இன்று அதிகாலை 2 மணியளவில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.அவரது மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பாலிவுட்டில் கடந்த சில மாதங்களாக தொடரும் முக்கியமான பிரபலங்களின் மரணச்செய்தி பாலிவுட்டை பெரும் அதிர்ச்சிக்குளாக்கி வருகிறது.சரோஜ் கானின் மகன் ராஜு கானும் பிரபல நடன இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.