கலாபவன் மணிக்கு அடுத்து மலையாளத்து திரை உலகத்தில் இருக்கும் பல குரல் மன்னன் சுதீஷ். பத்து படங்களில் நடித்திருக்கிறார். ஒரு தமிழ்ப்படத்தில் நடித்திருப்பதாகவும் சொன்னார். அந்தப்படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.
கொரானா கொள்ளை நோய் காரணமாக திரைத்தொழில் முடங்கிக் கிடப்பதால் இவரைப் போன்ற நடிகர்களுக்கு வாழ்வாதாரம் வேறு என்னவாக இருக்க முடியும்?
முன்னர் அவர்கள் செய்த தொழில்தான் கை கொடுக்க வேண்டும்.
குரிச்சிரா செயின்ட் ஜோசப் பள்ளியில் ஓவிய ஆசிரியராக இருந்தவர். அதற்கு முன்னர் திருச்சூரில் மீன் வியாபாரம்.
பள்ளிகள் மூடிக்கிடப்பதால் வாத்தியார் வேலைக்குப் போக முடியாது. மீதமுள்ள ஒரே வழி மீன் வியாபாரம் தான்.!
ஆரம்பித்து விட்டார் புதிய வாழ்க்கையை.!திறந்து விட்டார் புதிய மீன் கடையை.! செம ஜோராக வியாபாரம் நடக்கிறது. சினிமா நடிகரின் கடையில் மீன் வாங்கினோம் என்கிற பெருமைக்காகவே வாடிக்கையாளர் கூட்டம் எக்க்குகிறது என்கிறார்கள்.
(படம் ;மலையாள மனோரமா.)