ஷகீலா. ஒரு காலத்தில் மலையாளத்துக்கரையோர கனவுக்கன்னியாக வாழ்ந்தவர் .
கடவுளின் தேசத்து சூப்பர் ஸ்டார்கள் இவரது படத்தைக்கண்டு அஞ்சினார்கள் .அந்த அளவுக்கு கவர்ச்சியானால் கட்டிப்போட்டிருந்தார். இவரது வாழ்க்கை திறந்த புத்தகம் .
,ராக்கிளிகள், கின்னாரத் தும்பிகள் உட்பட ஏராளமான மலையாள படங்களில் நடித்திருக்கிற ஷகிலா 2000 ஆம் ஆண்டு வரை தனது கவர்ச்சியால் மலையாள சினிமாவையே தன் பக்கம் வளைத்து போட்டு இருந்தார்.
பிரபல மலையாள முன்னணி நடிகர்கள் படங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி ஷகிலாவின் படங்கள் வசூல் அள்ளின.இது மலையாள கதாநாயக நடிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஷகிலா படங்களை தயாரித்தவர்கள் பலர் கோடீஸ்வரர்கள் ஆனார்கள்.
இதையடுத்து ஷகிலா படங்களை பார்த்து இளைஞர்கள் கெட்டுப் போவதாக கேரளாவில் எதிர்ப்பு கிளப்பியது.
பின்னர் அவர் தமிழ் சினிமாவுக்கு மீண்டும் வந்தார்.இங்கு ஒரு அரசியல் கட்சிப் பிரமுகர் ஷகீலாவை கல்யாணம் செய்து கொள்வதற்கு முன் வந்தார். என்ன நினைத்தாரோ அவர் ஏமாற்றிவிட்டுப் போய்விட்டார் .இதன்பிறகு காமடி வேடங்களில் நடித்து வந்தவருக்கு மார்க்கெட் சரிந்து விட்டது.இதனால் யாரும் வாய்ப்பு அளிக்கவில்லை.
இவரது வாழ்க்கையை படமாக்கினால் என்ன ?
கன்னட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் இயக்கத்தில் அந்த படம் எடுத்து முடிக்கப்பட்டு விட்டது.
ஷகிலாவாக பிரபல இந்தி நடிகை ரிச்சா சத்தா நடித்திருக்கிறார்.
இந்தியில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட உள்ளது.
லாக்டவுன் காரணமாக பல தயாரிப்பாளர்கள் ஒடிடி-யில் தங்களது படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஷகிலாவின் பயோபிக் படமும் நெட்பிளிக்ஸில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து இப் படத்தின் இயக்குனர் இந்திரஜித் லங்கேஜ் கூறும்போது, ‘படத்துக்கு இன்னும் தணிக்கை முடியவில்லை. கதையில் அழகான மெசேஜ் இருக்கிறது. லாக்டவுன் முடிந்ததும் தியேட்டர்களில் வெளியிட முடிவு செய்துள்ளோம். இருந்தாலும் சில ஒடிடி தளங்களில் இருந்தும் அழைப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அதனுடனும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்’ என்கிறார் .