
தற்கொலை செய்துகொள்கிற எண்ணம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் வந்துதான் ஆகுமோ என்கிற நினைப்பு சிலரது ஸ்டேட்மென்ட்களை பார்க்கிறபோது தோன்றுகிறது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலை பலரது நினைவுகளை வெளிக்கொணர்ந்திருக்கிறது.
இசைஞானியின் இளைய வாரிசும் தமிழ்த்திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவருமான, யுவன்சங்கர்ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடுகையில், ’உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப் பெரிய பயம் என்ன’ என்ற ரசிகர் ஒருவரின் கேள்விக்கு யுவன் சங்கர் ராஜா கூறியுள்ள பதில், திரையுலகில் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.,
‘இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன்பாக எனக்கும் தற்கொலை எண்ணங்கள் வந்தது. ஆனால் அவற்றையெல்லாம் கடக்க எனக்கு இஸ்லாம் மதம் பெரிதும் உதவியது’ என்று கூறியுள்ளார்
.நடிகர் விஜய் குறித்த கேள்விக்கு ’எனக்கு பல வழிகளில் ஊக்கம் அளித்தவர் அவர்’ என்று தெரிவித்தார். அஜித்தின் ‘வலிமை’ படத்தின் இசை பணிகள் குறித்த கேள்விக்கு, ‘வலிமை படத்தின் இசை பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன, கொரோனா காரணமாக அந்த பணிகள் தாமதமாகின்றன’ என்று தெரிவித்துள்ளார்.












