உச்சி மண்டையில் அடித்து சொன்னாலும் ஏறாத மரமண்டைகளுக்கு ஆணி அடித்து சொல்வதில் பிரசன்னா தனித்து நிற்பவர்.
தமிழனின் மறதியை பற்றி அவருக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.
லஞ்ச ஊழல் வழக்கில் 4 வருஷம் ஜெயில் தண்டனை ,இதே ஜெயலலிதா கொலை செய்யப்பட்டார் என்று விசாரணை கமிஷன் , ரயில்வே நிலையத்தில் குத்தி கொலை செய்யப்பட்ட மாணவி பற்றிய வழக்கு இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போக முடியும்.இவையெல்லாம் நிகழ்ந்தபோது அரசியல்வாதிகளும் ,யதார்த்தவாதிகள் என்று சொல்லிக்கொண்டவர்களும் ,நாங்களும் 4 வது தூண் என்று சொல்லிக்கொள்ளும் பத்திரிகைகளும் ,துப்பறியும் புலிகள் என சொல்லிக்கொண்ட ஊடகங்களும் பரபரப்பாக செய்திகளை ,தகவல்களை அள்ளி அள்ளி வழங்கின.வழங்கினர் .
ஆனால் போகப்போக காலம் செல்ல செல்ல எல்லாமே மறக்கப்பட்டன .அதை பிரசன்னா நாசூக்காக சுட்டிக்காட்டியிருக்கிறார். அதற்கு சேரன் பதில் அளித்திருக்கிறார்.
“ஜெயலலிதாவாகட்டும் ஜெயராஜ் ஆகட்டும் , ஜெயப்ரியாவாகட்டும் அவர்களது மரணம் அல்லது கொலை ,அல்லது கற்பழிப்பு இவையெல்லாம் அடுத்த செய்திகள் கிடைக்கும் மட்டுமே பரபரப்பு. ஆனால் உண்மையில் மாறவேண்டியது எதுவோ அது மட்டுமே துயரத்தை தருகிறது .மறதி ஒரு தேசியவியாதி “என்று சொல்லியிருந்தார்.
இதற்கு சேரன் தனது கருத்தை பதிவு செய்திருந்தார்.