விஜயசேதுபதி முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிற துக்ளக் தர்பார் படத்தின் முதல் போஸ்டர் வருகிற 8 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாவதாக அறிவிப்பு வந்திருக்கிறது. டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் இந்த படம் வளர்ந்திருக்கிறது .7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் லலித்குமார் படத்தை தயாரித்திருக்கிறார்.
கோவிந்த் வசந்தா இசை அமைக்கிற இந்த படத்தில் பார்த்திபன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். விஜய்சேதுபதியுடன் அதிதி ராவ் ,மஞ்சிமா மோகன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கொரானா அச்சுறுத்தல் நீங்கியதும் படப்பிடிப்பு தொடங்கும்.