இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் ஸ்டார்ட் கட் சொல்லிக்கொண்டு இருப்பது? தயாரிப்பையும் தொடர வேண்டியதுதானே என்று மீண்டும் செக் புக்கை எடுத்திருக்கிறார் மிஸ்கின். விஷாலுக்கும் கொஞ்சம் ‘டப் ‘கொடுத்த மாதிரி இருக்குமே.!
ஸ்க்ரீன் சரவணன் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் இவர்களுடன் மிஷ்கினும் இணைந்து தயாரிக்கிற படம்தான் ‘பிதா ‘ இயக்கம் ஆதித்தியா .மிஷ்கினின் உடன்பிறப்பு.
அப்பா மகளுக்கான உறவுதான் கதை. மகளை கண்டுபிடிக்கப்போராடும் தந்தையின் வலியை சொல்லப்போகிறதாம் அதாவது பிதாமகள் !!
.இந்தப்படத்தில் கலையரசன், ஆர்.ஜே.ரமேஷ் திலக், ராதாரவி ஆகியோருடன் இன்னும் சில முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். அனு கீர்த்தி வாசு என்கிற அறிமுகம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.. இன்று இந்தப்படத்தின் தொடக்க பூஜை விழா நடைபெற்றது. இந்த பூஜையில் மிஷ்கின், மதியழகன் உள்ளிட்ட பிதா படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்றனர்.