ஸ்ரீ ரபாகா .
ராம்கோபால்வர்மாவின் ‘நேக்டு’ படத்தின் நாயகி. இந்த படத்தின் வழியாக பெரிய சென்சேஷனை கிரியேட் பண்ணி இருக்கிறார். துணிச்சலான காட்சிகள் துட்டு குவிக்கிறது. வாரிக்கட்டுகிறார் வர்மா.
உறங்கிக்கிடந்த வர்மாவின் ரசிகர் பட்டாளம் வரிசை கட்டி பணம் கொடுத்து பார்த்துக் கொண்டு இருக்கிறது. அடுத்த படத்தின் அறிவிப்பும் வந்து விட்டது. யூ டியூப் சேனலில் இன்டர்வியூக்களை அள்ளி விட்டுக்கொண்டிருக்கிறார் ஸ்ரீ ரபாகா .
அதில் முக்கியமானது “நான் ராம்கோபால் வர்மாவின் படத்தில் நிர்வாணமாக நடிக்கவில்லை ” என்கிற ஸ்டேட்மெண்ட்தான்.!
அப்படியானால் ‘அப்படிப்பட்ட ‘காட்சிகள் ‘எப்படி எடுக்கப்படடதாம் ? இதற்கும் அவர் மிகவும் திறமையாக பதில் சொல்லியிருக்கிறார்.
“அது ஆர்ஜிவி யின் திறமையான கேமரா வேலை!அவரது திறமையான வேளையில் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன் .அந்த மாதிரியான சீன்களை அவர் சிறந்த டைரக்டர் என்பதால் படமாக்க முடிந்திருக்கிறது.இதுதான் உண்மை .நான் நிர்வாணமாக நடிக்கவில்லை ” என்கிறார்.
ஆர்ஜிவி இப்படித்தான் இண்டர்வியூ கொடுக்க வேண்டும் என்று சொல்லியிருப்பாரோ?
அது சரி ,ஆணும் பெண்ணும் கல்யாணத்துக்கு முன்னால்ஆணும் பெண்ணும் உடல் ரீதியாக இணைவது பற்றி ஸ்ரீ ரபாகா என்ன கருதுகிறார்.?
“ஆணும் பெண்ணும் உடல்ரீதியாக கலப்பது தெய்வீகமானது .அறிவார்ந்த யோசனைக்கு பின்னர் அத்தகைய முடிவை மேற்கொள்ள வேண்டும். இருவரும் வாழ்க்கையில் இணைவதற்கு முன்னர் ஒருவரைப் பற்றி ஒருவர் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும் ,அது சாதகமாக அல்லது பாதகமாக அமையலாம். நான் கல்யாணத்தின் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். இரண்டு குடும்பங்கள் சேர்ந்து திருமண முடிவை எடுப்பதால்.!”என்கிறார் நேக்டு நடிகை