அர்ஷத் வர்சி .பாலிவுட்டில் நடிகர். நல்ல ஓவியரும் ஆவார்.
கடந்த 4 மாதங்களாக கொரோனா லாக் டவுனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ள நிலையில் மொத்தமாக கணக்கிடுவதால் மின் கட்டணம் மிக அதிகமாக வருவதாக பலரும் புகார் கூறி வருகிறார்கள்.
நடிகர் நடிகைகளும் தங்களுடைய சமூக வலைதளங்களில் மின்கட்டண திடீர் உயர்வு பற்றி புலம்பி வருகிறார்கள். நடிகர், பாடகர், ஓவியர் என பன்திறமை கொண்டபாலிவுட் நடிகர் அர்ஷத் வர்சி என்பவரின் வீட்டிற்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான மின் கட்டணம் வந்திருக்கிறது.,
அவரது வங்கி கணக்கில் இருந்து அவரை கேட்காமலேயே மின் துறையினர் பணத்தை எடுதிருக்கிறார்களாம்
.இது குறித்து கருத்து தெரிவித்த நடிகர் ஹர்சன் வர்சி, “மின் கட்டணம் என்ற பெயரில் கொள்ளை நடந்து வருவதை தடுக்க யாருமே இல்லை .மேலும் நான் வரைந்த ஓவியங்களை விற்றுத்தான் தற்போது வீட்டுச் செலவை கவனித்து வருகிறேன் இந்த மின் கட்டணம் அடுத்த மாதமும் தொடர்ந்தால் அடுத்த மாதம் மின் கட்டணம் கட்ட என்னுடைய சிறுநீரகங்களை தான் விற்க வேண்டிய நிலைமை வரும்”என்று கூறி உள்ளார்.