சென்னை 28, சென்னை 28 (2-ம்பாகம்) , பூ, சுந்தரபாண்டியன், ஆர்.கே.நகர் என பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இனிகோ பிரபாகர், அழகர் சாமியின் குதிரை, ரம்மி, பிச்சுவாகத்தி, வீரய்யன் ஆகிய படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார் .
இனிகோ பிரபாகர் தனது திரையுலக அனுபவம் குறித்து பேசுகையில், “நான் என்றும் என் கதாபாத்திரத்தின் தன்மை மாறாமல் நடிப்பது ரசிகர்களுக்கு பிடித்திருந்தது. அதிலும் ஆர்.கே.நகர் படத்தில் வில்லனாக நடித்திருந்தாலும் அந்த படத்தில் கதாநாயகனுக்கு நிகரான கதாபாத்திரம் என்பதால் எனது நடிப்பு எதார்த்தமாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் சரவண ராஜன் விரும்பினார், நானும் அதையே செய்தேன்.
இயக்குனர் வெங்கட்பிரபு ஆர்.கே நகர் படத்தில் என நடிப்பை பலரும் பாராட்டியதாக கூறியது என்னை மேலும் உத்வேகப்படுத்தியது.தற்போது இரண்டு புதிய படங்களில் கதாநாயகனாக நடிக்கின்றேன். இந்த இரண்டு படங்களின் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
‘ஆர்.கே.நகர் படத்தில் கிடைத்தது போன்ற சவாலான வில்லன் கதாபாத்திரம் கிடைத்தால் மீண்டும் நடிப்பீர்களா?’ என எனது ரசிகர்கள் பலர் என சமூக வலைதளத்தில் கேட்டிருந்தனர். அதற்கு ‘கண்டிப்பாக செய்வேன்’ என்று பதிலளித்திருந்தேன். அவர்கள் கூறியது போன்றே அப்படிப்பட்ட சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது” என்கிறார் மகிழ்ச்சியுடன்..