1988ஆம் ஆண்டு வெளியான கலியுகம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் பொன்னம்பலம்.வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகர் பொன்னம்பலம், சிறுநீரக கோளாறு காரணமாக அடையாறில் உள்ள வி எச்.எஸ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது சிகிச்சைக்கு நடிகரும் மக்கள் நீதிமயயக்கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் உதவி வருகிறார். மேலும் நடிகர் மற்றும் சிகிசசை பெற்று வரும் நடிகர் பொன்னம்பலத்திடம், தினமும் தொலைபேசியில் கமல்ஹாசன் தொடர்புகொண்டு நலம் விசாரித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் பொன்னம்பலத்தின் இரண்டு குழந்தைகளின் படிப்புச் செலவினை உலகநாயகன் கமல்ஹாசன் ஏற்றுக்கொண்டுள்ளார்.