வில்லன் நடிகர் பொன்னம்பலம் எப்படி இருக்கிறார்?
டயாலிஸ் முடிந்து மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குத் திரும்பி விட்டார்.
டயாலிஸா?
ஆமாம் .அவருக்கு சர்க்கரை வியாதி இருந்தது.மூச்சுத் திணறல் .டயாலிஸ் செய்யவேண்டிய அவசியம் வந்துவிட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நெப்ரோ டாக்டர் பிரபாகர்தான் சிகிச்சை செய்தவர். டயாலிஸ் செய்ய வேண்டிய நிலையை சொன்னதும் அதற்குரிய கட்டணத்தைக் கேள்விப்பட்டதும் தலை சுற்றிவிட்டது. தனக்கு வேண்டியவர்களிடம் உதவி கேட்டிருக்கிறார் .
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உடனடியாக டாக்டர் பிரபாகருக்கு போன் பண்ணி அதற்கான செலவினங்களை தானே ஏற்றுக் கொள்வதாக சொல்லி சிகிச்சையை ஆரம்பிக்க சொல்லிவிட்டார்.
ஆனால் டயாலிஸ் செய்கிற விவரம் கேட்டதுமே சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் வருமா என்கிற சந்தேகமும் வந்துவிட்டது போலும்.! சிம்ஸ் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கிளம்பி விட்டார் .கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நாட்டாமை படத்தில் பொன்னம்பலம்தான் மெயின் வில்லன். கதாநாயகன் சரத்குமார்.இந்த படத்துக்குப்பிறகுதான் பொன்னம்பலம் அதிக அளவில் பேசப்பட்டார்.
தற்போது வி.எச் எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டயாலிஸ் முடிந்து வீட்டுக்குத் திரும்பி இருக்கிறார் .இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்கான செலவு கமல்ஹாசனுடையது.