இளையராஜாவின் இசையமைப்பில் 1௦௦௦ மாவது படமாக சமீபத்தில் தாரை தப்பட்டை வெளியாகி அவரது ரசிகர்களைக்கவர்ந்தது. இந்நிலையில் சில,பல காரணங்களால் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தும் திட்டத்தை இயக்குநர் பாலா கைவிட்டுவிட தற்போது ,புதிய படங்களை வாங்குவது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்துடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் விஜய் டிவி, தயாரிப்பாளர் சங்கத்தின் எதிர்ப்பை மீறி வரும் பிப்ரவரி 27 ம் தேதி இந்த விழாவை நடத்துகிறது. இவ்விழாவுக்காக இளையராஜாவின் நேர்காணல் ஒன்றை விஜய் டிவிக்காக இயக்குநர் கவுதம் மேனன் எடுத்துக் கொடுத்திருக்கிறார். ஊதா நிற முழுக்கை டீஷர்ட் மேல் கோட் அணிந்து கவுதம் மேனனும், வழக்கம் போல முழு வெள்ளை நிற உடையில் இளையராஜாவும் இந்த நேர்காணலில் பங்கு பெற்றுள்ளனர்.நீதானே என் பொன்வசந்தம் படத்திற்கு இளையராஜா இசையமைத்த போது ஏற்பட்ட பழைய நினைவுகளை மறக்காத இளையராஜா நேர்காணலை எடுக்க சம்மதம் சொன்னதுடன், ஒரு முழு நாளையும் கவுதம் மேனனிற்கு ஒதுக்கிக் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.