கொரானாவினால் செய்திகள் முடக்கம் ,அரசியலாகட்டும் சினிமாவாகட்டும் எல்லாமே லாக்டவுன் அடைப்புக்குள் மாட்டிக்கொண்டு விட்டன. இந்த நிலையில்தான் வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம் ட்ரெண்டாகிவிட்டது.
23 வயதில் மகன் இருக்கிறான்.முதல் கணவர் ஆகாஷ் வழி மகன். அவன் அப்பாவிடம் வளர்ந்தபிள்ளை. இவனது தங்கை வனிதாவிடம் வளர்கிறது. இரண்டாவது கணவர் வழியாக வந்த மகளும் அம்மாவிடம். இந்த நிலையில் பீட்டர் பால் என்பவரை கிறிஸ்தவமுறைப்படி வீட்டிலேயே கல்யாணம் செய்து கொண்டார். பீட்டர் பாலின் முதல் மனைவி வடபழனி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார். ஆக பீட்டர் பால் ,மனைவி ஹெலன் ஆகியோரது பஞ்சாயத்து இன்னமும் முடிவுக்கு வரவில்லை. சூழ்நிலை வனிதாவுக்கு பாதகமா சாதகமா என்று சொல்ல முடியாத நிலை.
இத்தகைய நிலையில்தான் இணையங்களில் வனிதாவின் மூன்றாவது திருமணத்துக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். வேறுவிதமாக சொல்வதானால் கழுவி ஊற்றுகிறார்கள்.! லட்சுமி ராமகிருஷ்னன் ,குட்டி பத் மினி ,தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் வனிதாவுக்கு ஆலோசனை சொல்லி வசமாக வனிதாவின் வாயில் அரைபட்டனர். முதல் இருவரும் “அம்மா தாயே விட்டு விடு “என்று ஓடிவிட்டனர். தயாரிப்பாளர் ரவீந்திரன் அசைந்து கொடுப்பதாக இல்லை.
இதனால் இணைய வழி தாக்குதல் தன்னை மிகவும் பாதிப்பதாக வனிதா விஜயகுமார் தற்போது புலம்பி வருகிறார் . சூயிங்கமாக மெல்லப்படுவது வனிதாவின் மூன்றாவது திருமணம்தான்.!
இப்போது எச்சரிக்கை விடும் பாணியில் சூடாக வனிதாவின் பதிவு வெளியாகியிருக்கிறது.
“ஒருவரை வல்கராகவும் ,புண்படுத்தும் வகையில் கமெண்ட் போடுவது சட்டத்துக்கு எதிரானது .இணைய வழி தாக்குதல் ( சைபர் புல்லியிங் ) காமடி அல்ல.அது சிலரின் உயிரை குடித்து விடும் .நான் என்ன ஆகவேண்டும் என்று நினைக்கிறீர்களோ ,அதை மன அழுத்தத்தால் அல்லது வெறுப்பினால் செய்து கொள்வேன். உங்கள் எல்லோரையும் கொலையாளி ஆக்கிவிடும்.யோசியுங்கள். நான் குற்றம் செய்தால் சட்டம் சும்மா விடாது. கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.”
இவ்வாறு வனிதா விஜயகுமார் கூறி இருக்கிறார். ஆகவே மக்களே பாவங்களுக்கு ஆளாகாதீர்கள்.!