கல்யாணம் ஆகிடுச்சா, மஞ்சளும் குங்குமுமா தொங்கத் தொங்க தாலி கட்டிக்கிட்டமா சரி.இதுக்குப் பிறகு சினிமாவில நடிக்கணுமா என்ன? குட் பை சொல்லிவிட வேண்டியதுதானே!
நடிகை சமிக்ஷா சொல்லிவிட்டார் .
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா, நவ்தீப் நடித்த அறிந்தும் அறியாமலும்,கார்த்திகை, பஞ்சாமிர்தம், முருகா, தீ நகர், மெர்க்குரி பூக்கள் உட்பட சில படங்களில் நடித்திருந்தவர்தான் சமிக்ஷா.
தொடரந்து பட வாய்ப்புகள் எதுவும் சரிவர வரவில்லை.இதனால் இந்தி, பஞ்சாபி, தெலுங்கு, கன்னட படங்களிலும் கால் பதித்து இந்தி டிவி தொடர்களிலும் நடித்து வந்தார்.
இந்த சமயத்தில்தான் பிரபல பாப் பாடகரும், தொழிலதிபருமான ஷாயல் ஓஸ்வால் என்பவரை நடிகை சமிக்ஷா காதலித்து வருவதாக கிசுகிசு வந்தது,கல்யாணமும் நடந்தது.
இவர்கள் இருவரும் கடந்த 3 ஆம் தேதி சிங்கப்பூரில் திருமணம் செய்துகொண்டனர்.
இதுகுறித்து நடிகை சமீக்ஷாஎன்ன சொல்கிறார் ?
“ஷாயல் பாடிய ஒரு பாடலின் மியூசிக் வீடியோவில் நான் ஆடினேன். அப்போது அவர் என் புகைப்படத்தைக் கண்டு காதலில் விழுந்ததாகச் சொன்னார்.
அப்போது அவர் மீது எனக்கு காதல் வரவில்லை. அந்தப் பாடல் படமாக்கப்பட்டபோது நட்பாக பழகினோம். பிறகு நெருங்கிவிட்டோம். அவர் எனக்கு கணவரானது, எனக்கு கிடைத்த அதிர்ஷ் டம்.கடந்த பிப்ரவரி மாதம் தேரே நாள் என்ற இன்னொரு பாடலை படமாக்க சிங்கப்பூர் வந்தோம். பிறகு இங்கேயே செட்டிலாகி விட்டோம்.
கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், எங்கள் குடும்பத்தினர் மத்தியில், கடந்த 3 ஆம் தேதி நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். இனி நடிக்கப் போவதில்லை. குட்பை சொல்லிவிட்டேன். ஸ்கிரிப்ட், இயக்கம் , தயாரிப்பு உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்த இருக்கிறேன்’ என்கிறார்.
நல்ல முடிவுதான் ! இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் !
சமீக்ஷாவுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து 10 வயதில் ஒரு மகன் இருக்கிறார் .ஷாயலுக்கும் தனது முதல் மனைவி மூலம் மகன்,மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.