வித்தியாசமான முயற்சியாக சில இயக்குனர்கள் ஒன்றாக இணைந்து, மூன்று நான்கு கதைகளை ஒன்றாக இணைத்து அந்தோலஜி படங்களாக இயக்கி வெளியிட்டுள்ளனர்.
சமீபத்தில் வெளியான அவியல் மற்றும் சில்லுக்கருப்பட்டி போன்ற திரைப்படங்கள் தமிழக ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது.
முன்னணி நட்சத்திர இயக்குனர்களான கவுதம் மேனன், வெற்றிமாறன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் முதன் முறையாக ஒன்றாக இணைந்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளனர்.
அசுரன் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் ஜல்லிக்கட்டை மையப்படுத்தி,சூர்யாவின் இரட்டைவேட நடிப்பில், வாடிவாசல் திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில், தற்பொழுது இந்த அந்தோலஜி படத்தில் தன்னுடைய பாகத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் சாய்பல்லவியை வைத்து இயக்க உள்ளார்.
சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், விஜய் சேதுபதியின் நானும் ரவுடிதான் போன்ற படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன், நடிகை அஞ்சலி மற்றும் கல்கி கோக்லின்ஆகியோரை வைத்து தனது பாகத்தை இயக்கவுள்ளார்.
சூர்யா நடிப்பில் சூரரைப் போற்று படத்தை இயக்கியுள்ள சுதா கொங்கரா,சாந்தனு பாக்யராஜ், காளிதாஸ் ஜெயராம்,பவானி ஸ்ரீ ஆகியோரது நடிப்பில் தனது பாகத்தை இயக்கவுள்ளார்.
கவுதம்மேனன், நடிகர் அஸ்வின் குமாரை வைத்து தன்னுடைய பாகத்தை இயக்க உள்ளார்.இப்படத்தை பிரபல ஓடிடி நிறுவனம் வெளியிட உள்ளது.
இயக்குனர் சிம்புதேவன் தற்பொழுது கசடதபற என்ற அந்தோலஜி திரைப்படத்தை பல இளம் நடிகர்களை வைத்து இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.