தமிழ் சினிமாவின் இளம் கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் ஷாந்தனு,முருங்கைக்காய் பாக்ராஜின் வாரிசு , விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் .
தற்போது ஷாந்தனு நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் ரவிந்தர் சந்திரசேகரன் தயாரிக்கும் இப்படத்திற்கு முருங்கைக்காய் சிப்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
ஶ்ரீஜர் இயக்கும் இப்படத்தில் அதுல்யா ரவி கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன்,யோகிபாபு, மனோபாலா, மதுமிதா, ரேஷ்மா உள்பட பலர் நடிக்கும் இப்படத்திற்கு தரண் இசையமைக்கிறார்.
முருங்கைக்காய் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது முந்தானை முடிச்சு படமும் அதன் நாயகன் பாக்யராஜூம் தான். இப்படத்தின் 2 ம் பாகம் பாக்யராஜின் கதை,திரைக்கதை வசனத்தில்,சசிகுமார் நடிப்பில் மீண்டும் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சாந்தனு தான் நடிக்கவுள்ள புதிய படத்துக்கு முருங்கைக்காய் எனும் டைட்டிலை வைத்துள்ளது குறித்து, தனது சமூக வலைதளத்தில்,”இந்த சமாச்சாரம் செம ஃபன்னாக இருக்க போகிறது” என பதிவிட்டுள்ளார்.