விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ’மாஸ்டர்’ திரைப்படத்தை தொடர்ந்து அவரது நெருங்கிய உறவினரான சேவியர் பிரிட்டோ ,விஜய் மகன் சஞ்சய் அறிமுகமாகும் படத்தையும் தயாரிக்க இருப்பதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இதுகுறித்து சேவியர் பிரிட்டோ கூறியதாவது,
“விஜய் மகன் சஞ்சய்க்கு இயக்குநராவதில்தான் அதிக ஆர்வம் உள்ளது. அவருக்கு ஹீரோவாக நடிக்கும் ஆர்வம் இருக்கிறதா இல்லையா என்பது எனக்கு தெரியாது.
தற்போது அவர் கனடாவில் படித்து வருகிறார். படித்து முடித்த பிறகு அவர் எந்த துறையை தேர்ந்தெடுக்கிறார் என்பதை அதன் பின் தான் முடிவு செய்ய முடியும்.
சஞ்சய் படத்தை நான் தயாரிக்கவிருப்பதாக வெளிவந்த செய்தி முற்றிலும் வதந்தி. ஜேசன் சஞ்சய்யை நடிக்க வைப்பது குறித்து நான் விஜய்யிடம் பேசினதே இல்லை’ .மேலும்,’மாஸ்டர்’ திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட் படம் என்பதால், ஓடிடியில் வெளியாகும் வாய்ப்பு எதுவும் இல்லை”என்கிறார் உறுதியாக .