விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் புலி. இப்படத்தை விஜய்யின் உதவியாளர் பி.டி.செல்வகுமார் தயாரித்திருந்தார்.இப்படம் பெரும் தோல்வியடைய, விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்டனர். ஆனால், இன்று வரை நஷ்ட ஈடு வழங்கப்படவில்லையென கூறப்படுகிறது. இந்நிலையில் செல்வகுமார் அடுத்து தயாரித்து வெளியிடும் போக்கிரி ராஜா படத்திற்கு விநியோகஸ்தர்கள் தரப்பில் ரெட் கார்ட் விதித்துள்ளனர்.இதன் மூலம் போக்கிரி ராஜா படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது. இப்படம் பிப்ரவரி 26ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.