பூஜைதான் போட்டார்கள். இன்னும் ஷூட்டிங் நடக்கவில்லை.அதற்குள் தயாரிப்புகளுக்குள் முட்டல் மோதல்.! எப்படி கரை சேரும் என்பது தெரியவில்லை.
மிஷ்கினின் தம்பி இயக்கப்போவதாக அறிவிக்கப்பட்டு பூஜை நடந்த ‘பிதா’ படத்தின் நிலைதான் இப்படி இருக்கிறது.
மிஷ்கினின் தம்பி ஜி.அர்.ஆதித்யா இயக்கும் ‘பிதா’ என்ற படத்துக்கான அலுவலக பூஜை கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது.
இதில் இயக்குனர்கள் மிஷ்கின், ஆதித்யா உள்பட பலர் கலந்துகொண்டனர்..இந்தப் படத்தில் கலையரசன், ரமேஷ் திலக், அனு கீர்த்தி வாஸ், ராதாரவி உட்பட பலர் நடிக்க இருக்கின்றனர்.பிரபல தயாரிப்பாளர் மதியழகனும் நடிக்கிறார் வில்லனாக.!
இயக்குனர் மிஷ்கினுடன் , ஸ்ரீகிரீன் சரவணன், மற்றும் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்ரேஷன்ஸ் இணைந்து இப் படத்தைத் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த மூன்று நிறுவனங்களின் லோகோக்களும் படத்தின் போஸ்டரில் இடம்பெற்றன. இது இப்போது சர்ச்சை ஆகி இருக்கிறது.
மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘பிதா படத்துக்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அதனால் எங்கள் நிறுவனத்தின் பெயரையோ, லோகோவையோ போஸ்டரில் பயன்படுத்தக் கூடாது’ என்று தெரிவித்துள்ளது.
படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே,மிஷ்கினின் பிதா திரைப்படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது தமிழ்த்திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.