சடக் 2 என்கிற இந்திப் படத்தின் போஸ்டர் தொடர்பாக ஒரு வழக்குப் பதிவாகி இருக்கிறது.
“போஸ்டரில் காணப்படுகிற கைலாஷ் மானசரோவர் மலை இந்துக்கள் வணங்குகிற கடவுள் சங்கரின் வாழ்விடமாகும். (சங்கர் என்றுதான் சிவனை வடநாட்டவர்கள் அழைக்கிறார்கள். ) அந்த மலை மீது தயாரிப்பாளர் ,நடிகர் ,இயக்குநர் ,நடிகை ஆகியோரின் பெயர்கள் இருக்கின்றன. இது இந்துக்களின் மதவுணர்வினை காயப்படுத்தி விட்டது “என சொல்லி வினய் பாண்டே என்கிற வக்கீல் புகார் செய்திருக்கிறார்.
இந்த படத்தை மகேஷ் பட் இயக்கியிருக்கிறார். சஞ்சய் தத் ,பூஜாபட் ,அலியா பட் ,ஆதித்ய ராய் கபூர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.இந்த வழக்கு செப்டம்பர் மாதம் விசாரணைக்கு வருகிறது.