சுமார் 8 வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த ஜோதிகா 36 வயதினிலே படம் மூலம் திரையுலகில் மறு பிரவேசம் செய்தார். இப்படமும் ரசிகர்களிடம் நல்லவரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, ஜோதிகா மீண்டும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அவரின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. . இந்நிலையில் குற்றம் கடிதல் படத்தின் மூலம் அனைவரையும் உருக வைத்த பிரம்மாவின் அடுத்த படத்தில் ஜோதிகா நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது பெண்களின் பிரச்சினைகளை அலசும் ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டு அதற்கான கதை, விவாதத்தில் பிரம்மா ஈடுபட்டு வருகிறாராம். பெண்களை மையமாகக் கொண்ட படமென்பதால் ஜோதிகாவை இப்படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறதாம்.