கொரானா கொள்ளை நோய் யாரைத்தான் விட்டு வைத்தது?
“அது பணக்கார வியாதி “என்று நம்முடைய முதல்வர் பழனிச்சாமி சார் சொன்னாலும் அது ஏழை பணக்காரர் என்கிற வேறுபாடு இல்லாமல் சகட்டு மேனிக்கு எல்லோர் மீதும் பாய்ந்து வருகிறது.
நாட்டுக்குள் நல்ல மனுஷன் அமிதாப் பச்சன் .எந்த வில்லங்கத்துக்கும் போகாதவர் .அவரையும் மகன் அபிஷேக் ,மருமகள் ஐஸ்வர்யாராய் ,பேத்தி ஆராதியா ஆகிய நால்வரையும் தொற்றிக்கொண்டிருக்கிறது.
நாடே வருத்தத்தில்.! விரைவில் குணம் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள். தமிழ்நாட்டில் சில மந்திரிகளுக்கு கொரானா.அவர்களுக்கு ஓட்டுப்போட்டவர்களில் ஒருத்தர் கூட மண் சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்தியதாக செய்தி வரலே.! ஆனால் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் .தலைவர் கலைஞர் ,தலைவி ஜெயலலிதா , ஆகியோருக்காக நாடே கதறியதை நினைத்துப்பார்க்க வேண்டியதிருக்கிறது. செல்வாக்குன்னா அப்படி இருக்க வேண்டும் .
இனி அமிதாப் விஷயத்துக்கு வரலாம்.
மருத்துவமனையில் இருந்தபடியே தனக்காக பிராத்தனை செய்கிற ரசிகர்களுக்கும் மக்களுக்கும் அமிதாப் நெகிழ்வுடன் நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.
“அபிஷேக், ஐஸ்வர்யா, ஆராத்யா மற்றும் என்மீது அக்கறை காட்டிய அனைவருக்கும் நன்றி.. அன்புகாட்டிய அனைவருக்கும் பதிலளிக்க முடியாத சூழலில் உள்ளேன்.. குணமடைய பிராத்தனையும், வாழ்த்துகளும் தெரிவித்த அனைவருக்கும் , என் கரங்கள் உயர்த்தி எல்லையில்லாத அன்பு, நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”