அழகிய நடிகை. வாயாடி .பேசாமல் இருக்க முடியாது. வம்பு இழுக்காமல் வாய் மூட மாட்டார் .குறும்புத்தனம் நிறைய.
இத்தகைய குணம் கொண்ட இளம் நடிகையை கல்லீரல் புற்று நோய் காவு கொண்டது.
பாலிவுட்டில் சில படங்களில் நடித்திருந்தாலும் அவரை பிரபலமாக்கியது எம்.டி.வி சீரியல்தான்.!
திவ்யா சவுக்சி .வயது 29. போபாலை பிறப்பிடமாக கொண்டவர்.அப்பாவும் சகோதரியும் பிரபலமான வழக்குரைஞர்கள். திவ்யா தனது மேற்படிப்பை இங்கிலாந்தில் முடித்துக் கொண்டு நாடு திரும்பியதும் மாடலிங்கில் கவனம் செலுத்தி பிரபலம் அடைந்தார். அவரை பாலிவுட்டும் சீரியலும் பயன்படுத்திக்கொண்டது.
அவருக்கு கணையத்தில் புற்று நோய். ஒன்றரை வருட போராட்டம். படுக்கையில்தான் வாழ்க்கை என்றாகிப்போனது. வாயாடி என அன்புடன் அழைக்கப்பட்டவரால் பேசுவதற்கு இயலவில்லை.மரண வாக்குமூலம் போல தன்னுடைய சமூக வலைப்பக்கத்தில் இப்படி எழுதுகிறார்.
“மரணப்படுக்கையில் நான்.!
நான் வலிமையானவள்தான் .ஆனாலும் வழியின்றி சுலபமாக மரணத்தை கடக்க பிரார்த்தனை செய்யுங்கள்.!”
தன்னுடைய வேதனையை இதை விட வேறு எப்படி சொல்ல முடியும். நேற்று இறந்துவிட்டார்.