மும்பையை பலமுடன் பிடித்து வைத்திருக்கிறது கொரானா .இந்தியாவின் உச்ச நட்சத்திரமான அமிதாப் பச்சனின் குடும்பத்தையே உலுக்கிவிட்டதே.! அதிர்ந்து போய் விட்டார்கள் ரசிகர்கள்.
பாலிவுட் நடிகை ராச்சல் ஒயிட் .தல அஜித்குமாரின் மங்காத்தாவில் சிறு வேடத்தில் நடித்திருந்தனர். இந்தி ,பெங்காலி ஆகிய மொழிப்படங்களில் நடித்திருப்பவர் ,இவரைப்பற்றி சிறப்பாக சொல்வதென்றால் பிரபல இயக்குநர் சஜித் நதியா வாலாவை சந்திக்கு இழுத்தவர்.பாலியல் புகார் கூறியவர்.
தனது ட்விட்டர் கணக்கில், “எனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். விரைவில் குணமடைய பிரார்த்தியுங்கள்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்..
இதையடுத்து சினிமா பிரபலங்களும் ரசிகர்களும், தைரியமாக இருங்கள், பயப்பட வேண்டாம். இதில் இருந்து மீண்டு விடுவீர்கள் என்று நம்பிக்கை அளித்துள்ளனர்.