வெட்டி பந்தா இல்லாமல் வாழ்கிறவர்கள் தமிழ்த் திரையுலகில் வெகு சிலரே.!
அந்த வெகு சிலரில் விஜயசேதுபதி ஒருவர்.இதனால்தான் அவர் மக்கள் செல்வன்.
தமிழ்த்திரையுலகில் எவ்வித பின்புலமுமின்றி தனியாக போராடி தனக்கான ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டிருக்கிறார் .
தளபதி விஜய்யுடன் முதன் முதலாக இணைந்து நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
நாயகனாக பல வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிற இவர் பிரபலங்களுடன் இணைந்து நடிப்பதற்கு தயங்குவதில்லை. காரணம் தன்னுடைய நடிப்பின் மீதான நம்பிக்கை.அவர் அவரது பாணியில் நடிக்கப்போகிறார். தான் தன்னுடைய கேரக்டருக்கு நிறைவாக நடித்தால் போதும் என்கிற நம்பிக்கை.
இந்த மனிதரை ரசிகர்கள் மிகவும் உயர்வான இடத்தில் வைத்திருக்கிறார்கள். ‘மாஸ்டர்’படம் எப்படி வந்திருக்கிறதாம்?
‘மாஸ்டர்’ திரைப்படம் மிக பிரமாண்டமாக வந்திருக்கிறது., இந்த படத்தின் டிரைலரை நான் பார்த்து விட்டேன் ,மிக சிறப்பாக இருக்கிறது. ரசிகர்களையும் மக்களையும் மிகவும் கவரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.”என்று கூறியுள்ள அவர்,”இந்த படத்தின் வில்லன் கேரக்டரை நான் மிகவும் ரசித்து செய்திருக்கிறேன்.என்னை விட பெரிய நடிகரான விஜய்யுடன் நடிக்கும் போது முதலில் கொஞ்சம் பயந்தேன், ஆனால் அவருடன் நடிப்பதில் மிகவும் சௌகரியமாக இருந்தது “என்றார்
மேலும், “சினிமாவுக்கு வந்ததால் பெயர், புகழ், செல்வம் உள்ளிட்ட பல விஷயங்களை பெற்றாலும் என்னுடைய அப்பாவித்தனத்தை சினிமாவுக்கு வந்தபின்னர் இழந்துவிட்டேன் என்றும், சினிமாவுக்கு வருவதற்கு முன் ஓரளவுக்கு நேர்மையாகவும் நல்லவனாகவும் இருந்தேன்”என்றும் விஜய்சேதுபதி கூறியுள்ளார்.