கவிப்பேரரசு வைரமுத்து இன்று 66 வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.இதையடுத்து பல முக்கிய பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள்என பலரும் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர். இந்நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து, தனது டிவிட்டர் பக்கத்தில் கவிதை ஒன்றை பகிர்ந்துள்ளார்.
“என் ஐம்பதாண்டு
இலக்கிய வாழ்க்கையில்
எது எளிதெனில்… எழுதுவது.
எது கடிதெனில்…
வஞ்சகம் – சூழ்ச்சி
பொறாமை – பொய்ப்பழி
இவற்றைக் கடப்பது.
கடந்தால் வாழ்வு செழுமையுறும்;
மன்னிக்கும் போது தான் முழுமையுறும்.
முழுமையை நோக்கி…
இவ்வாறு அவர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.