தலைவியா ,அல்லது அயர்ன் லேடியா ?
கங்கனாவா,நித்யா மேனனா? ஜெயலலிதாவை சரியாக பிரதிபலிக்கக்கூடியவர் அவரா ,அல்லது இவரா என்கிற சர்ச்சை ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது.
தலைவி படத்தில் ஜெ வாக நடிப்பவர் கங்கனா .அயர்ன் லேடியில் ஜெ வாக நடிப்பவர் நித்யா மேனன்.
கங்கனாவை இயக்குகிறவர் ஏ.எல் விஜய் .அயர்ன் லேடியை இயக்குபவர் பிரியதர்ஷினி . கவுதம்மேனனின் வெப் சீரியல் ஒன்று தனியாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் நடித்திருப்பவர் ரம்யா கிருஷ்ணன் .
ஆக முன்னாள் முதல்வர் , தலைவி ஜெயலலிதாவின் வாழ்க்கைப் பதிவில் அசலாக அவரை திரையில் முன் நிறுத்தப்போகிறவர் கங்கனாவா ,நித்யா மேனனா?
நித்யா மேனன் என்ன சொல்கிறார்.?
“நான் ஒரு நடிகை .எனக்குக் கொடுக்கப்பட்ட கேரக்டருக்கு நான் உண்மையாக நடந்து கொள்ளவேண்டும். மற்றவர்களுடன் ஒப்பிடுவதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. நான் ஏற்றுள்ள கேரக்டரைப்போல மற்றவர்கள் செய்கிறார்கள் என்பதால் நான் அலட்டிக் கொள்ளவும் இல்லை. நான் உண்மையிலேயே அக்கறை கொள்வது நான் ஏற்றுள்ள அந்த உண்மையான கேரக்டருக்கு சரியாக இருக்கிறேனா ,சரியாக பிரதிபலிக்கிறேனா என்பதுதான் !அந்த அசல் கேரக்டரை நான் சரியாக செய்ய வேண்டும் என்பதுதான் எனது அக்கறை.!”என்கிறார் நித்யா மேனன்.
“ஜெயலலிதாவைப் பற்றிய படங்கள் அதிகம் வருவதைப் பற்றி நான் கவலைப் படவில்லை.அவைகள் வித்தியாசமாக இருக்கலாம். அவர்களது படத்தை அவர்கள் எடுக்கிறார்கள். நாம் நமது படத்தை எடுக்கிறோம் அவ்வளவுதான் என்று படத்தின் இயக்குனர் சொன்னது நினைவில் இருக்கிறது “என்கிறார் நித்யா.
கரெக்ட் ! படங்கள் வரட்டும் .தீர்ப்பு சொல்ல மக்கள் இருக்கிறார்கள்.