இசைப்புயல் ரகுமானின் இரண்டு மகள்களில் கதீஜா மட்டும் பர்தா போட்டுக்கொள்வார். ரஹீமா மாடர்ன் பொண்ணு .மகனும் மாடர்ன் .இவர்களில் மகனும் மகள் ரஹீமாவும் அப்பாவைப்போல இசையில் ஆர்வமுள்ளவர்கள்.
உலகம் முழுவதிலும் தனக்கென ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.இவர் ஒரு சர்வதேச இசையமைப்பாளராக வலம் வருகிறார். அவரைப் பின்தொடர்ந்து அவரது குழந்தைகளின் இரத்தத்திலும் இசை கலந்திருப்பதில் ஆச்சரியமில்லை
மகள் ரஹீமா கீபோர்டு வாசிக்கும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஏ.ஆர். ரஹ்மான், “என் செல்ல மகள் எங்களை ஆச்சரியத்துக்கு அழைத்துச் சென்று விட்டார்” என பதிவிட்டுள்ளார்.
விரைவில் ஏ.ஆர், ரஹ்மானின் மகள் ரஹீமாவின் தனி இசைஆல்பம் வெளியாகலாம் என்கிறார்கள். ஏ.ஆர். ரஹ்மான் தற்போது, ,கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.