முன்னணி நடிகர்களுடன் போட்டியிடும் அளவுக்கு நடனமாடுவதில் சாய் பல்லவி திறமையானவர். ரவுடி பேபி பாட்டுக்கு , இவர் நடனமாடுகிற வேகத்தைப்பார்த்துத்தான் மாஸ்டர் பிரபுதேவா அவ்வளவு கஷ்டமான ஸ்டெப்ஸ்களை கொடுத்திருந்தார்.
2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ’பிரேமம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சாய்பல்லவி, மலர் டீச்சராக அகில இந்திய அளவில் ரசிகர்களை ஈர்த்தார். இதனையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பிஸியான நடிகையாக மாறினார்.
இந்நிலையில் நடிப்பு மட்டுமின்றி சிறு வயதிலிருந்தே நடனத்திலும் கவனம் செலுத்தி வந்த சாய்பல்லவி’ சின்னத்திரை நடன நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து கொண்டார்.
அதேபோல் தெலுங்கு ரியாலிட்டி நடன நிகழ்ச்சிகளிலும் ஆர்வத்துடன் கலந்து கொண்டவர்
தற்போது ஒரு திரைப்படத்திற்கு நடனம் அமைக்கவும் அவர் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சாய் பல்லவி நடித்த ’பிடா’ என்ற படத்தை இயக்கிய சேகர் கம்முலா தற்போது ’லவ் ஸ்டோரி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். நாக சைதன்யா ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் அமைக்கும்படி நடிகை சாய் பல்லவியிடம் இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அதற்கு சாய்பல்லவி ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.