நடிகை நித்யாமேனன் இந்தியில், அபிஷேக் பச்சன் நடித்து வரும் ’ப்ரீத் இன் டூ த ஷேடோஸ் என்ற வெப்தொடரில் லெஸ்பியன் கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த தொடரின் இரண்டாவது எபிசோடில் நித்யா மேனன் தன்னுடன் நடித்த சுருதி பாப்னா என்பவருக்கு உதட்டுடன் உதடு சேர்த்து லிப்லாக் முத்தம் கொடுக்கும் சுமார் 40 வினாடி காட்சியும் அதன் பின் இருவரும் ஆடைகளை களைந்து கட்டி பிடிப்பது போன்ற காட்சியும் இடம்பெற்று உள்ளது
திரைப்படங்களில் கவர்ச்சியாக கூட இதுவரை நடித்திராத நித்யா மேனன், வெப் சீரியலில் லிப் லாக் காட்சியில் நடித்துள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
திரைப்படங்கள் போன்று ஓடிடி தளத்திற்கு சென்சார் இல்லாததால் இது மாதிரியான காட்சி அமைக்கப்படுவதாகவும், ஓடிடி தளத்தில் பெரும்பாலும் இளைஞர்களை கவர்வதற்காக இதுபோன்ற காட்சிகள் அதிகம் இடம்பெறுவ தாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.