தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்து வரும் ‘கொடி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அண்ணன் தனுஷ் {இளைஞர் அணித்தலைவராக }அரசியல்வாதியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் நாயகி திரிஷாவும் அரசியல்வாதியாக எம்.பியாக நடித்து வருவதாகவும், இந்த படத்தில் அவருடைய கேரக்டர் பெயர் ‘ருத்ரா’ என்றும் தற்போது தெரியவந்துள்ளது.
துரைசெந்தில்குமார் இயக்கி வரும் இந்த படத்தில் இன்னொரு நாயகியாக ‘பிரேமம்’ அனுபமா பரமேஸ்வரன் நடித்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.