இனிவரும் திரையுலகம் இப்படித்தான் இருக்கும் என்கிற நவீனமான சிந்தனையுடன் எதிர்காலத்தை கணிப்பவர்களில் இந்திய சினிமாவில் உலகநாயகன் கமல்ஹாசனை விட்டால் வேறு யார் இருக்கிறார்?
டிடிஎச் தொழில் நுட்பத்தில் தன்னுடைய விஸ்வரூபம் படத்தை வெளியிட முயன்றபோது முட்டுக்கட்டைப் போட்டவர்கள் இன்று ஓடிடி தளத்தில் தங்களது படங்களை வெளியிட முந்துகிறார்கள்.எத்தனையோ துறைகளில் -சினிமா தொடர்பானவைகளில் வித்தியாசத்தைக் கொண்டு வந்தவர் கமல்ஹாசன் மட்டுமே.!ஒப்பனையில் இவர் செய்யாத புது முயற்சிகளா!
மக்கள் நீதி மய்யம் என்கிற அரசியல் இயக்கத்தை நடத்திக் கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கத்தில் புதுமையாக ஒரு கதையும் தயாராகிறது. ஓடிடி தளத்துக்காகவே.!லாக்டவுன் முடிந்ததும் அது தொடர்பான அறிக்கைகளை வெளியிட்டு படப்பிடிப்பினையும் தொடங்குவார் என எதிர்பார்க்கிறார்கள்.