போலிகளுக்கு இங்கென்ன பஞ்சமா? போலிக்கணக்கு எழுதுபவர்களுக்கு பற்றாக்குறையா? பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிற அளவுக்கு இருக்கிறார்கள். இது தெரியாமல் மாட்டிக்கொண்டு முழிக்கிறார் ராம்கோபால் வர்மாவின் கவர்ச்சி நடிகை .
ராம்கோபால் வர்மாவின் ’திரில்லர்’ என்ற படத்தில் அதிரடி கவர்ச்சி கதாநாயகியாக நடிக்கிறார் நடிகை அக்சரா ராணி.
ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த இவர் தனது கடந்த 15 நாட்களுக்கு முன் புதிதாக டுவிட்டர் பக்கத்தை தொடங்கி, அதில் அவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களையும் ’திரில்லர்’ திரைப்படத்தின் சில புகைப்படங்களையும் பதிவிட்டு இருந்தார்.. இவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
ஆனால் கடந்த நான்கு நாட்களில் மட்டும் தனது பெயரில் 50க்கும் அதிகமான போலி டுவிட்டர் அக்கவுண்ட்கள் உருவாகியிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
நடிகர் நடிகைகளின் பெயரில் போலியான ட்விட்டர் மற்றும் பேஸ்புக் அக்கவுண்ட் தொடங்குவது பல ஆண்டுகளாக தொடரந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.