நடிகர் சுஷாந்த் தற்கொலைக்குப் பின்னர் அந்த பிரச்னை பல சிக்கல்களை அள்ளிக்கொண்டு வந்திருக்கிறது. ஒரு பக்கம் சிபிஐ விசாரணை வேண்டும் என்கிறார்கள் .மறு பக்கம் சுஷாந்தின் நெருக்கமான நடிகைக்கு மிரட்டல்கள் என பல நெருக்கடிகள் ,பயமுறுத்தல்.
சுஷாந்த்துடன் நெருக்கமாக இருந்தவர் நடிகை ரியா சக்கரவர்த்தி. தற்கொலையைப் பற்றிய பல விவரங்களை போலீசுக்கு தெரிவித்திருக்கிறார் என்கிற செய்திகள் பரபரப்புடன் வெளியாகின.அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியாது.
தற்போது ரியாவின் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்துக்கு ஒரு கடுமையான மிரட்டல் கடிதம் பதிவாகி இருக்கிறது.
“நீ கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்படுவாய் .பெட்டை நாயே !நீ தற்கொலை செய்து கொள் !இல்லையேல் ஆட்களை அனுப்பி உன்னை தீர்த்துக் கட்டிவிடுவேன்.!”என்பதாக அந்த மிரட்டல் இருக்கிறது.
இதற்கு ரியா பதில் அனுப்பியிருக்கிறார்.
“என்னை பிறர் பொருட்களை அபகரிப்பவர் என்று சொன்னார்கள்.
அமைதியாக இருந்தேன்.
கொலைகாரி என்கிறார்கள்.
பொறுமையாக இருந்தேன்.
என்னை இழிவு படுத்தினார்கள் .
இதற்கும் அமைதி காத்தேன்.
இப்படியெல்லாம் அமைதியாக இருப்பதால் மிரட்டுவதா? தற்கொலை செய்து கொள்ளாவிட்டால் கற்பழித்து .கொலை செய்து விடுவதாக மிரட்டுவீர்களா? இதெல்லாம் குற்றங்கள் யாரையும் இப்படி மிரட்டுவதை யாரும் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.இதை சைபர் கிரைம் விடக்கூடாது .தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் “என்பதாக பதிவு செய்திருக்கிறார் .