ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஹன்சிகா .
நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது 50-வது திரைப்படமான ‘மகா’ படத்தில் தனது முன்னாள் காதலர் சிம்புவுடன் இணைந்து நடித்து வருகிறார் .
வாலு திரைப்படத்திற்கு பிறகு காதல் முறிவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் இருவரும் தொடர்ந்து நடிக்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது சிம்பு.ஹன்ஷிகா மீண்டும் இணைந்து நடித்து வரும் மகா திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எகிறியுள்ளது.
லாக்டவுன் காரணமாக எந்த ஒரு படப்பிடிப்புகளும் நிகழ்ச்சிகளும் பிரமாண்டமாக நடைபெறாத நிலையில்,ஹன்சிகா தனது அம்மாவின் பிறந்த நாளை வீட்டிலேயே மிக எளிமையான முறையில் தன்னுடைய சகோதரர் உடன் இணைந்து மலர்கள் மற்றும் பலூன்களால் வீட்டில் மிக அழகாக அலங்கரித்தும் கேக் வெட்டி கொண்டாடி அம்மாவை இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கி விட்டாராம்.
இந்த கடினமான லாக்டவுன் சூழலிலும் தனது அம்மாவிற்கு சர்ப்ரைஸாக வீட்டில் பிறந்தநாள் டெக்கரேஷன், கேக் மற்றும் பரிசு பொருட்களை கொடுத்து கொண்டாடி உள்ளது பலரையும் பாராட்ட வைத்துள்ளது.இப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.