தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகை நயன்தாரா,
கடந்த நான்கு மாதங்களாக படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருப்பவர் தற்போது ஒரு விளம்பரப் படத்தில் நடித்துள்ளார் என்கிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக கதை நாயகியாக தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாரா, இன்னும் எத்தனை மாதங்கள் வீட்டில் சும்மாவே கிடப்பது, மனச் சிதைவுக்கு ஆளாகி விடுவோமோ என்ற பயத்தில்,தனது விதிமுறைகளை எல்லாம் தூர எறிந்து விட்டு தற்போது விளம்பர படங்களில் நடிக்க வந்துவிட்டார் என்கிறது அவருக்கு நெருங்கிய வட்டாரம்.
கொரோனா லாக்டவுன் முடிவுக்கு வந்தவுடன் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த’ மற்றும் ’நெற்றிக்கண்’, , ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்களில் பிசியாகி விடுவார் என்கிறார்கள்.