ஹாலிவுட் இயக்குநர் ஃபெடி அல்வரேஸ் இயக்கத்தில் வெளியான ‘டோன்ட் ப்ரீத்’ படம் உலகளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
திரில்லர் படமான இதை தமிழில் ரீமேக் செய்யப் போவதாகவும், இந்த படத்தில் பார்வை அற்ற நாயகன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரம் நடிக்கப் போவதாகவும் கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது.
ஆனால் இப்படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் தாமதிக்கப் பட்டதால் , கோப்ரா, பொன்னியின் செல்வன், மகாவீர் கர்ணன் ஆகிய படங்களில் விக்ரம் பிசியாகி விட்டார்.
, இந்த படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், இந்த படத்தில் நடிக்க, நடிகர் விக்ரம் மீண்டும் ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேசமயம் இப் படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் நடிக்கப் போவதாக வெளியான தகவல் அனைத்தும் வதந்தி தான் என்கிறது படத்தரப்பு.