சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி.
வருகிற நவம்பர் மாதம் அவரது அரசியல் பிரவேசம் பற்றிய முழு அறிக்கையை அளிக்கப்போகிறாராம்.
அரசனாக இருப்பதை விட அரசனை உருவாக்குகிறவராக இருப்பதே மேல் என்பதுதான் அவரது நோக்கம் என்றாலும் , அதை மக்கள் ஏற்பார்களா என்பது சந்தேகம் என உடன் இருப்பவர்கள் சொல்லிவருகிறார்கள்.
எது எப்படியோ நவம்பர் மாதம் கட்சியின் பெயர் ,சின்னம் ,உள்பட கட்சியின் முழு விவரத்தையும் அறிவிக்க இருக்கிறார் என்கிறார்கள். அதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்ற முக்கிய நிர்வாகிகளிடம் பேசிவருவதாகத் தெரிகிறது.இடையில் கொரானா வந்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட விடாமல் தடுத்து இருக்கிறது என்கிறார்கள்.